Suche

Tamil Worship Service - Braunschweig

Monthly Sunday Tamil Worship Service

மாதாந்திர தமிழ் ஞாயிறு ஆராதனை

The partnership between St.Johannes, Braunschweig and TELC Peelamedu, Coimbatore exist since decades. Now we are glad to have a monthly tamil worship service directly in Braunschweig.

The service happens once in a month (mostly third sundays of the month)

Place: Martin Luther Haus, Zuckerbergweg 26, 38124, Braunschweig.

Time: 16:00

Next appointment: 23.11.2025 

Feel free to join us in traditional tamil dress code (not a must) ! :)

 


மாதாந்திர ஞாயிறு ஆராதனை

பிரவுன்ச்வீக்கின் செயிண்ட் ஜோஹன்னஸ் மற்றும் கோயம்புத்தூரில் உள்ள பீலமேடு TELC இடையேயான Partnership பல தசாப்தங்களாக இருந்து வருகிறது. இப்போது பிரவுன்ச்வீக்கில் நேரடியாக மாதாந்திர தமிழ் ஆராதனை நடத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த சேவை மாதத்திற்கு ஒரு முறை (பெரும்பாலும் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில்) நடைபெறும்

இடம்: மார்ட்டின் லூதர் ஹவுஸ், ஜுக்கர்பெர்க்வெக் 26, 38124, பிரவுன்ச்வீக்.

நேரம்: 16:00

அடுத்த சந்திப்பு: 23.11.2025

 

 

International Worship Service 16th of November 2025 at 4 PM

பிரான்ஸ்வைக்கில் நடைபெறும் இரண்டாவது சர்வதேச தெய்வீக ஆராதனை பற்றிய அறிவிப்பு.

பிரான்ஸ்வைக் திருமண்டலமும், எவாஞ்சலிக்கல் மாணவர் குழுவும் இணைந்து நடத்தும் சர்வதேச ஆராதனைக்கு அன்புடன் அழைக்கிறோம்.

விசுவாசம், நம்பிக்கை, அன்பு என்ற வேத கருத்தை மையமாக வைத்து சர்வதேச கண்ணோட்டத்துடன் பாடல்களும், தேவசெய்தியும் இடம்பெறும். நாம் சந்திக்கும் இந்த கூடுகையில் நாம் தியானிக்கும் மைய கருத்து நமது ஆண்டவர் இயேசுவை விசுவாசித்து நடக்கும் பாதைக்கு பாலமாகவும் , அடித்தளமாகவும் அமையும்.

வருகின்ற நவம்பர் 16 மாலை 4 மணிக்கு பிரான்ஸ்வைக்கில் உள்ளமார்ட்டின் லூதர் ஹவுஸ், Zuckerbergweg 26 இல் நடைபெறும் சர்வதேச தேவ ஆராதனையில் குடும்பமாக பங்கு பெற நாங்கள் மகிழ்ச்சியுடன் உங்களை அழைக்கிறோம்.

வேற்று மொழி வாசகங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு இடம்பெறும். மேலும் தேவ ஆராதனைக்கு முன்பாக தேநீர் வழங்கப்படும். ஆராதனைக்கு பிறகு அனைவரும் கொண்டு வந்து பகிர்ந்து உண்ணும் அன்பின் விருந்துக்கும் அழைக்கிறோம்.

ஆராதனை தயாரிப்பு குழுவில் இடம் பெறுபவர்கள்:

Propstei Braunschweig

Ev. Luth. Kirchengemeinde St. Johannis

Biblical Encounters Group

Evangelische Studierendengemeinde Braunschweig

Tigrayan – Orthodox Group Braunschweig

Tamil Ev- Lutheran Group Braunschweig

Landeskirche Braunschweig; Partnerschaftsarbeit